சமூக வலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப் செயலிக்கு போட்டியாக, களமிறக்கப்பட்ட அரட்டை செயலி, முன்னணி 100 செயலிகளின் பட்டியலில் இருந்து கீழிறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அரட்டை செயலி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, இந்தியாவுக்குள்ளேயே அதன் தகவல்கள் சேமிக்கப்படும். மூன்றாம் நபரின் தலையீடு இல்லை என்ற விளம்பரத்துடன் வெளியானது. இது ஆரம்பத்தில் ஏராளமானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதிகம் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எதிர்தரப்பினருக்கு போட்டியை ஏற்படுத்த தகவல்கள் பாதுகாப்பு, வாய்ஸ் மற்றும் விடியோ அழைப்புகள் என பல வசதிகளுடன் அரட்டை மேம்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால், அரட்டை செயலி கடந்த சில நாள்களாக அதிகம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளை அடிப்படையாகக் கொண்ட பட்டியலில், ஸ்ரீதர் வேம்புவின் அரட்டை செயலி முன்னணி 100 செயலிகளின் பட்டியலில் இருந்து வெளியேறியிருப்பதாகக் கூறப்படுகிறது.
தங்களது பணியை செவ்வனே செய்து வரும் ஸ்ரீதர் வேம்புவின் ஸோஹோ நிறுவனம், அரட்டை செயலியைத் தொடர்ந்து விரைவில் ஸோஹோ பணப்பரிமாற்ற செயலியை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க.. ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பலம் ஜென் ஸி-க்கு உள்ளது! ராகுல் காந்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.