பங்கிம் சந்திர சாட்டர்ஜி. 
இந்தியா

வந்தே மாதரம் இயற்றிய பங்கிம் சந்திர சாட்டர்ஜி யார்?

வந்தே மாதரத்தை இயற்றிய பங்கிம் சந்திர சாட்டர்ஜி யார்? என்பதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார். அவர் யார்? தேசிய பாடலான வந்தே மாதரம் எவ்வாறு உருவானது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ 1875-ஆம் ஆண்டு இயற்றப்பட்டு இன்றுடன் 150 வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. கார்த்திகை சுக்ல நவமி புனித நாளில், பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் இயற்றப்பட்ட பாடல், தேச விடுதலையின் ஒருமித்த கீதமாக மாறியது. அவ்வாறான இந்தப் பாடல் இந்திய சுதந்திர இயக்கம் மற்றும் நாட்டின் பெருமையை பறைசாற்றும் ஒற்றுமையின் அடையாளமாகவும் மாறியது.

பங்கிம் சந்திர சட்டர்ஜி முதன்முதலில், வந்தே மாதரம் பாடலை சமஸ்கிருதம் மற்றும் வங்கமொழியில் 1882 ஆம் ஆண்டு வெளியான தனது ‘ஆனந்தமடம்’ என்ற நாவலில் எழுதியுள்ளார். இதற்கு “நான் உன்னை வணங்குகிறேன், அம்மா” என்று பொருள்.

பல ஆண்டுகளான சுதந்திர போராட்டங்கள் மற்றும் கட்சிக் கூட்டங்களுக்கான போராட்டங்களில் ரவீந்திர நாத் தாகூரின் இசையில் இந்தப் பாடல் பாடப்பட்டது. பின்னர், 1937 ஆம் ஆண்டு காங்கிரஸ், வந்தே மாதரத்தின் முதல் இரண்டு வரிகளை தேசியப் பாடலாக ஏற்றுக்கொண்டது.

யார் இந்த பங்கிம் சந்திர சாட்டர்ஜி?

வங்கத்தின் நைஹாட்டிக்கு அருகே கந்தலபாறை என்ற இடத்தில் 1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துர்கா சுந்தரி தேவி மற்றும் ஜாதவ் சந்திர சட்டோபாத்தியாயா என்ற தம்பதியரின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. இவர் நாவலாசிரியர், பாடலாசிரியர் மற்றும் இதழியலாளர் என பன்முகத்தன்மைக் கொண்டவர்.

1958 ஆம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதற்கு முன்னதாக இவர் மோஷின் கல்லூரி மற்றும் பிரசிடென்சி கல்லூரியில் பயின்றார். மேலும், இவரது பள்ளியில் பட்டம் இரண்டு பேரில் இவரும் ஒருவர்.

கல்லூரி படிப்பை முடித்த பங்கிம், பிரிட்டிஷ் - இந்தியன் குடிமைப் பணியில் பணியாற்றி துணை நீதிபதியாகவும், உதவி ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர், அரம்பாக்கிங் துணைப் பிரிவு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 1869 ஆம் ஆண்டில் சட்டத்தில் பட்டம் பெற்றார்.

தொடக்கக்காலத்தில் பங்கிமின் எழுத்தார்வம் ஈஸ்வர சந்திர குப்தா என்பவர் வெளியிட்ட வார இதழான சங்க்பத் பிரபாகர் என்ற இதழில்தான் தொடங்கியது.

அதன்பின்னர், மேற்கு வங்கத்தின் ஹூக்லியில் உள்ள கர் மந்தரன் கோட்டையின் அழிவை அடிப்படையாகக் கொண்டு அவர் தனது முதல் நாவலான துர்கேஷ்நந்தினி-யை எழுதினார்.

இந்த நாவல் 1865 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நாவல் வங்கமொழியில் நவீன காதல் இலக்கியத்தின் முதல் புத்தகமாக அறியப்படுகிறது. மேலும், பங்கிமை பிரபலப்படுத்தியதில் இந்த நாவலுக்கு தனிச் சிறப்பு உண்டு.

வங்க மொழியில் சாகித்திய சாம்ராட் என்றழைக்கப்படும் சட்டர்ஜி, கபால குந்தளம், மிர்ணாளினி, தேவி சௌதாரிணி மற்றும் 'ஆனந்த மடம்' போன்றவை மிகச் சிறந்த நாவல்கள் உள்பட 14 நாவல்களையும், நகைச்சுவை, அறிவியல் கதைகளையும் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.

1891 ஆம் ஆண்டு சட்டர்ஜியை கௌரவிக்கும் விதமாக ராய் பகதூர் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் 1894 ஆம் ஆண்டு இந்திய நாட்டிற்காக சேவை ஆற்றியதற்காக, இந்தியப் பேரரசின் சிறப்புமிக்க தோழமை விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

உடல் நலக் கோளாறு காரணமாக அவர் தனது பணியிலிருந்து 1891 ஆம் வருடம் விருப்ப ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஆன்மிகத்தில் ஈடுபட்ட இவர், 1894 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் நாள் தனது 56 ஆம் வயதில் காலமானார்.

Bankim Chandra Chatterjee: The Man Who Wrote Iconic 'Vande Mataram'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆா்: சென்னை மாநகராட்சிப் பகுதியில் 6.42 லட்சம் பேருக்கு கணக்கீட்டுப் படிவம்

ஆா்எஸ்எஸ், பாஜகவின் குரலாக அதிமுக மாறி வருகிறது: மு.வீரபாண்டியன்

பயங்கரவாதி அபுபக்கா் சித்திக் மீண்டும் சிறையில் அடைப்பு

தலைமைப் பண்பு என்பது தனிப்பட்ட வெற்றி அல்ல: குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

தில்லி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: 800 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

SCROLL FOR NEXT