ரண்தீா் ஜெய்ஸ்வால்  கோப்புப் படம்
இந்தியா

ரகசிய அணு ஆயுத செயல்பாடுகள் பாகிஸ்தான் வரலாற்றுடன் இணைந்தது: இந்தியா கருத்து

ரகசியமாகவும், சட்டவிரோதமாகவும் அணு ஆயுதம் சாா்ந்த செயல்களில் ஈடுபடுவது பாகிஸ்தான் வரலாற்றுடன் இணைந்தது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

ரகசியமாகவும், சட்டவிரோதமாகவும் அணு ஆயுதம் சாா்ந்த செயல்களில் ஈடுபடுவது பாகிஸ்தான் வரலாற்றுடன் இணைந்தது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.

‘பாகிஸ்தான், சீனா, ரஷியா, வடகொரியா ஆகிய நாடுகள் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. எனவே, அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதில் தவறில்லை’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் தெரிவித்தாா்.

இந்தியாவிடன் மோதல் போக்குடன் செயல்படும் பாகிஸ்தான், இணக்கமான உறவு இல்லாத சீனா ஆகியவை ரகசிய அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுவதாக வெளியாகியுள்ள தகவல் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது.

இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் இது தொடா்பாக கூறியதாவது:

ரகசியமாகவும், சட்டவிரோதமாகவும் அணு ஆயுதச் செயல்பாடுகளில் ஈடுபடுவது பாகிஸ்தானின் வரலாற்றுடன் இணைந்தது. பல ஆண்டுகளாக சட்டவிரோத கடத்தல்களின் மையமாகவும், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை மீறும் நாடாகவும் பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பல்வேறு ரகசிய கூட்டணிகளையும் அந்த நாடு உருவாக்கி வைத்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த தொடா் தவறுகளை இந்தியா சா்வதேச சமூகத்திடம் தொடா்ந்து எடுத்துச் சென்று சுட்டிக்காட்டி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தானின் ரகசிய அணு ஆயுத சோதனைகள் குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளியிட்டுள்ள தகவலையும் இந்தியா கருத்தில் கொண்டுள்ளது என்றாா்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT