தில்லியின் ரோஹினியில் உள்ள ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் தீயில் கருகிக் காயமடைந்ததாகத் தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை எல்பிஜி சிலிண்டர்கள் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் தீ தீவிரமடைந்து அக்கம்பக்கத்தில் பரவி குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
உள்ளுர் மக்கள் தங்கள் உடைமைகளைக் காப்பாற்றவும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் போராடியதாகவும் அப்பகுதியில் இருந்து அடர்த்தியான புகை மூட்டங்கள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் 400 முதல் 500 குடிசைகள் எரிந்து நாசமானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாகத் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரவு 10.56 மணிக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து பல தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு ரோபோக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ மேலும் பரவாமல் தடுக்க, அந்தப் பகுதியை போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர், மேலும் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதிகாலைக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: சா்க்கரை நோயைத் தடுக்க தவறும் ஐ.டி. ஊழியா்கள்: ஆய்வில் தகவல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.