பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்டில் உள்ள தேவ் பூமி பல்கலைக்கழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் நிகழ்வில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அப்போது மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளார்.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நடைபெறுவதால் மாணவர்கள் கலந்துகொள்வார்களா என்கிற சந்தேகம் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதுவும், பி.டெக் (கணினி) இரண்டாம் ஆண்டு மற்றும் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை குறிப்பிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மூத்த வழக்குரைஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் 'மோடி மோடி' என்று சப்தமிட்டால் எத்தனை மதிப்பெண்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.