பிரதிப் படம் 
இந்தியா

தேடப்பட்டு வந்த கேங்ஸ்டர்ஸ் இருவர் வெளிநாடுகளில் கைது!

பாதுகாப்பு அமைப்பால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த மோசமான குற்றவாளிகள் இருவர் அமெரிக்கா, ஜார்ஜியா நாடுகளில் கைது

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய பாதுகாப்பு அமைப்பால் தேடப்பட்டு வந்த ரௌடி கும்பல் தலைவர்களான வெங்கரேஷ் கார்க், பானு ராணா இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ஹரியாணாவில் நாராயன்கரில் வசித்துவந்த வெங்கடேஷ் கார்க் மீது 10-க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் உள்ளன. இவர் ஹரியாணா, ராஜஸ்தான், தில்லி உள்பட வட இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் இளைஞர்களை குற்றச் சம்பவங்களில் ஈடுபடுத்தி வந்தார்.

அதுமட்டுமின்றி, குருகிராமில் பகுஜன் சமாஸ் கட்சித் தலைவரை கொலை செய்துவிட்டு, ஜார்ஜியாவுக்கு வெங்கரேஷ் கார்க் தப்பியோடினார்.

ஜார்ஜியாவிலும், மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை வழிநடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், வெங்கடேஷ் கார்க்கை போலீஸார் கைது செய்தனர்.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய பானு ராணா, நீண்ட காலமாக குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ராணாவின் குற்றவியல் வலையமைப்பானது ஹரியாணா, பஞ்சாப், தில்லி வரையில் நீள்கிறது.

பஞ்சாபில் கையெறி குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில்தான், ராணாவின் பெயர் வெளியானது. இந்த நிலையில்தான், அமெரிக்காவுக்கு தப்பியோடிய பானு ராணாவை போலீஸார் கைது செய்தனர்.

இதையும் படிக்க: மத்திய சிறைக்குள் பயங்கவரவாத கைதிகளுக்கு மொபைல், தொலைக்காட்சி?

India’s most wanted gangsters Venkatesh Garg, Bhanu Rana arrested abroad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இரவின் ஒளி நீ... ஜான்வி கபூர்!

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு: இபிஎஸ் கண்டனம்

அகிலம் அதிருதா... தலைவர் 173 அறிவிப்பு - விடியோ!

வாக்குத் திருட்டை மூடிமறைக்கவே எஸ்ஐஆர்: ராகுல் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT