தில்லி கார் வெடிப்பு 
இந்தியா

தில்லி கார் வெடிப்பு! ஃபரிதாபாத் வெடிபொருள் பறிமுதலின் எதிரொலியாக நடத்தப்பட்டதா?

தில்லி கார் வெடிப்பு சம்பவம், ஃபரிதாபாத் வெடிபொருள் பறிமுதலின் எதிரொலியாக நடத்தப்பட்டதா?

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய ஹூண்டாய் ஐ20 மாடல் காரை ஓட்டி வந்தவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தில்லியில் வெடித்த காரை ஓட்டி வந்தது ஃபரிதாபாத்தைச் சேர்ந்த டாக்டர் முகமது உமர் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் ஃபரிதாபாத்தில் இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, பெரிய அளவில் அம்மோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டதன் எதிரொலியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும், இது தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி செங்கோட்டையில் திங்கள்கிழமை இரவு, கார் வெடித்த சம்பவத்தில் ஒரு சில வினாடிகளில், கார் வெடித்த இடம் போர்க்களம் போல காட்சியளித்தது. தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை காா் ஒன்று பலத்த சப்தத்துடன் வெடித்த சம்பவத்தில் 12 போ் பலியாகினர், 24 போ் காயமடைந்தனர்.

தில்லி வெடிப்பில் சம்பந்தப்பட்ட காரின் தற்போதைய உரிமையாளர் உமர் முகமது என்று ஆர்டிஓ பதிவு மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் புல்வாமாவைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

அதிலும் அக். 29ஆம் தேதிதான் 34 வயதாகும் டாக்டர் உமர் இந்தக் காரை வாங்கியிருக்கிறார். இவரும், ஏற்கனவே வெடிபொருள்களைப் பதுக்கி வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் பணியாற்றும் அதே ஃபரிதாபாத் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் என்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே, ஃபரிதாபாத்தில், தன்னுடைய கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தானும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதால், அதற்கு முன் ஏதேனும் மிகப்பெரிய நாச வேலையை நடத்திவிட வேண்டும் என்பதற்காக, உமர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஃபரிதாபாத்திலிருந்து கருப்பு முகக்கவசம் அணிந்தபடி, உமர் அந்த வெள்ளை நிறக் காரை ஓட்டி வந்துள்ளார். மூன்று மணி நேரம் செங்கோட்டை அருகே கார் பார்க்கிங்கில் கார் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நிமிடம் கூட உமர் காரிலிருந்து இறங்கவில்லை.

இந்த சம்பவம் நடப்பதற்கு முன்புதான், மருத்துவர்கள் உள்பட ஒரு மிகப்பெரிய பயங்கரவாத கும்பல் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 2900 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. ஃபரிதாபாத்தில் 360 கிலோ அம்மோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Was the Delhi car blast incident a response to the Faridabad explosives seizure?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ப்ளூயிஷ்... மோனாலிசா!

கையாள்வதும் கடினம், கவனம் சிதறுவதும் கடினம்... ஆனியா!

வானமும் கடலும்... சுமன் மோடி!

இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் கார் வெடி விபத்து! 5 பேர் பலியானதாக தகவல்! | Pakistan

ஒரு நாள் ஒரு பொழுது சூரிய கதிரில்... முக்தி மோகன்!

SCROLL FOR NEXT