பூடான் புறப்பட்டார் மோடி X/ANI
இந்தியா

பூடான் புறப்பட்டார் மோடி!

பிரதமர் மோடியின் பூடான் பயணம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பூடானுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டுச் சென்றார்.

இப்பயணத்தின்போது, இந்தியாவின் உதவியுடன் பூடானில் கட்டமைக்கப்பட்ட 1,020 மெகாவாட் திறன்கொண்ட மிகப் பெரிய நீா்மின் நிலையத்தை அவா் திறந்துவைக்க உள்ளாா்.

மேலும், பூடான் மன்னா் ஜிக்மே கேசா் நாம்கியெல் வாங்சுக், பிரதமா் ஷெரிங் தோபே ஆகியோரை சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா்.

தற்போதைய மன்னரின் தந்தையும், முன்னாள் மன்னருமான ஜிக்மே சிங்கியே வாங்சுக்கின் 70-ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட விழாவில் பங்கேற்கவுள்ளாா்.

இந்தப் பயணம் தொடர்பாக பதிவிட்டுள்ள மோடி தெரிவித்திருப்பதாவது:

“பூடானுக்குப் பயணம் மேற்கொள்கிரேன். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளேன். பூடானின் நான்காவது மன்னரின் 70-ஆவது பிறந்த நாள் கொண்டாடும் தருணத்தில் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறேன். பூடானின் நான்காவது மன்னர் மற்றும் பிரதமர் ஷெரிங் தோபே ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.

நமது எரிசக்தி கூட்டாண்மைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் புனாட்சங்சு - ll நீர்மின் திட்டத்தை தொடங்கிவைக்கவுள்ளேன். இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

PM Narendra Modi leaves for Bhutan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 எப்படியிருக்கும்? போரில் மேற்கத்திய நாடுகள் அழியுமா? பாபா வங்கா கணிப்பு!

யூடியூபர் கேமராவில் பதிவான தில்லி கார் வெடிப்பு!

ஜூபிலி ஹில்ஸ் தொகுதி இடைத்தேர்தல்! வாக்களித்த Rajamouli

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: சம்பந்தப்பட்ட காரின் சிசிடிவி காட்சி! | Delhi car blast

கேஸ் சிலிண்டர் லாரி கவிழ்ந்து விபத்து! வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்!

SCROLL FOR NEXT