ஒடிஸாவின் நுவாபடா பேரவைத் தொகுதியில் வாக்குப் பதிவு. 
இந்தியா

8 பேரவைத் தொகுதிகளில் இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு!

8 பேரவைத் தொகுதிகளில் தொடங்கிய இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு.

இணையதளச் செய்திப் பிரிவு

8 பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தெலங்கானாவின் ஜூபிலி ஹில்ஸ், ஒடிஸாவின் நுவாபடா, பஞ்சாபின் தரன் தாரன், ராஜஸ்தானின் அந்தா, ஜாா்க்கண்டின் காட்சிலா, மிஸோரமின் தம்பா, ஜம்மு-காஷ்மீரின் நக்ரோட்டா, பட்காம் என மொத்தம் 8 பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

பிகாரில் மொத்தமுள்ள 243 பேரவைத் தொகுதிகளுக்கான முதல்கட்டமாக 18 மாவட்டங்கள் அடங்கிய 121 தொகுதிகளில் நவ.6 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

இந்த நிலையில்,6 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 8 பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் இன்று(நவ. 11) நடைபெறுகிறது.

பிகார் பேரவைத் தோ்தல் மற்றும் 8 தொகுதிகளுக்கான இடைத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை (நவ.14) எண்ணப்படுகின்றன.

Voting for the by-elections has begun in 8 assembly constituencies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பன்றித் தொல்லை; பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

குடியரசு தின விழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா் ஆட்சியர்!

மாநில கடற்கரை கைப்பந்து போட்டி பரிசளிப்பு

மகளிர் பிரீமியர் லீக்கில் முதல் சதம் விளாசி உலக சாதனை!

விடுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம்

SCROLL FOR NEXT