திரிபுராவின் உனகோட்டி மாவட்டத்தின் கைலாசஹர் நகரில் புதிதாக 46 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சில நாள்களாக திரிபுராவில் டெங்கு பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், புதிதாக 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைலாசஹர் துணைப்பிரிவு மருத்துவமனையின் மருத்துவர் ரோஹன் பால் கூறுகையில்,
கைலாசஹரில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்.
கொசுக்களால் பரவும் நோய்க்கான பரிசோதனைகள் ஆண்டு முழுவதும் நடத்தப்படுகின்றது. இருப்பினும் கைலாசஹர் நகரம் மாநிலத்தின் பிற பகுதிகளை விட டெங்குவால் அதிகம் பாதிக்கப்படுகிறது.
துணைப்பிரிவு மருத்துவமனையிலோ அல்லது அருகிலுள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களிலோ டெங்கு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மக்களைப் பரிந்துரைக்கிறோம். சரியான நோயறிதல் இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்வது உடல்நல அபாயங்களுக்கு வழிவகுக்கும். பலர் மருத்துவரின் சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் சுய மருந்துகளை நாடுகின்றனர்.
தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்யும் ஏடிஸ் கொசுவால் டெங்கு பரவுகிறது. கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க மக்கள் தங்கள் வீடுகள் அல்லது பணியிடங்களைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் நோய் மேலும் பரவாமல் தடுக்க சுகாதார அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரங்களை முடக்கிவிட்டு கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்க: பிகார் தேர்தலில் பெண்கள் அதிகளவில் வாக்களிப்பு: பாஜக
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.