கோப்புப் படம்.  
இந்தியா

ஜார்க்கண்ட்: 25 ஆண்டுகளில் 10,769 மாவோயிஸ்டுகள் கைது; 555 வீரர்கள் பலி!

ஜார்க்கண்டில் 25 ஆண்டுகளில் 10,769 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில், கடந்த 25 ஆண்டுகளில் 10,769 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில், கடந்த 2001 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் முதல் 10,769 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2001 முதல் 2025 செப்டம்பர் வரையிலான 25 ஆண்டுகளில் 235 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகவும், 324 பேர் சரணடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினரிடம் இருந்து திருடப்பட்ட 710 ஆயுதங்கள் உள்பட 1,471 துப்பாக்கிகள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி, ஜார்க்கண்ட் மாநில காவல் துறையின் செய்தித்தொடர்பாளர் எஸ். மைக்கல் ராஜ் கூறியதாவது:

“கடந்த 2016 ஆம் ஆண்டு ஜார்க்கண்டில் சுமார் 22 மாவட்டங்களில் நக்சல்களின் பாதிப்பு இருந்தது. ஜார்க்கண்ட் காவல் துறை, மத்திய பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வுத் துறை ஆகியோரின் கூட்டு நடவடிக்கைகளின் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் 10,769 நக்சல்கள் கைது செய்யப்பட்டனர்.

தற்போது, ஜார்க்கண்டில் வெறும் 4 மாவட்டங்களில் மட்டுமே நக்சல்களின் பாதிப்புகள் காணப்படுகின்றன” எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 25 ஆண்டுகளில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் மாநில படைகளைச் சேர்ந்த 408 வீரர்களும், மத்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 147 வீரர்களும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஆந்திரத்தில் 17 மாதங்களில் 120 பில்லியன் டாலர் முதலீடு ஈர்ப்பு!

In Jharkhand, it has been reported that 10,769 Maoists have been arrested by security forces in the last 25 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அல் ஃபலாஹ் பல்கலை.யின் உறுப்பினா் பதவி ரத்து: ஏ.ஐ.யு. தகவல்

தில்லி காா் வெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல்தான்: அமெரிக்கா

விவசாயிகளுக்கு லாபகரமான கால்நடை வளா்ப்பு குறித்த பயிற்சி

ரூ.2,095 கோடியில் பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகள்: பாதுகாப்புத் துறை ஒப்பந்தம்

உக்ரைன் அமைச்சா்கள் பதவிநீக்கம்

SCROLL FOR NEXT