பிகார் தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவின் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 10 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 160 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.
தேஜஸ்வி யாதவ் தலைமையிலான இந்தியா கூட்டணி 78 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், மஹுவா சட்டப்பேரவைத் தொகுதியில் ஜனசக்தி ஜனதா தளம் கட்சியின் சார்பாக போட்டியிட்ட தேஜ் பிரதாப் யாதவ், காலை 10 மணி நிலவரப்படி நான்காவது இடத்தில் (1078) உள்ளார்.
லோக் ஜனசக்தி கட்சி(ராம் விலாஸ்) வேட்பாளர் சஞ்சய் குமார் சிங், 6,901 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, ராஷ்டீரிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்ட தேஜ் பிரதாப், தேர்தலுக்கு முன்னதாக ஜனசக்தி ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.