பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளில் முன்னிலை பெற்று பிகாரில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இந்தியா கூட்டணி 33 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
இந்நிலையில் பிகாரில் சந்தேஷ் தொகுதியில் வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ராதா சரண் சிங் வெற்றி பெற்றுள்ளார். இவர் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர்.
அந்த தொகுதியில் மொத்தமுள்ள 28 சுற்று வாக்கு எண்ணிக்கைகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் ராதா சரண் சிங் 80,598 வாக்குகள் பெற்றுள்ளார்.
இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ராஷ்ட்ரீய ஜனதா தள வேட்பாளர் திபு சிங் 80,571 வாக்குகள் பெற்றுள்ளார்.
மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராக ராதா சரண் சிங் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.