ராஜஸ்தான், தெலங்கானாவில் நடந்த இரு பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தானில் நடந்த அந்தா பேரவைத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் ஜெயின் பயா 69,571 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆளும் பாஜக வேட்பாளர் மோர்பால் சுமனை 15,612 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அவர் 53,959 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதேபோல் தெலங்கானாவின் ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ் வெற்றி பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அவர் பிஆர்எஸ் வேட்பாளர் மகந்தி சுனிதா கோபிநாத்தை விட 24,729 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் வேட்பாளர் 98,988 வாக்குகள், பிஆர்எஸ் வேட்பாளர் மகந்தி சுனிதா 74,259 வாக்குகள், பாஜகவின் தீபக் ரெட்டி 17,061 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் பிஆர்எஸ் வசம் இருந்த ஜூபிலி ஹில்ஸ் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.