பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் 8,500 வாக்குகள் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றது.
தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 208 தொகுதிகளில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. அதேவேளையில், மகாகத்பந்தன் கூட்டணி 28 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
மகாகத் பந்தன் கூட்டணியில் உள்ள முக்கியமான கட்சியான காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டு கிசன்கஞ்ச் மற்றும் பாகல்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், பிகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மதியம் 3.40 மணி நிலவரப்படி, 15 சுற்று வாக்குப் பதிவின் முடிவில் 52,942 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் சதீஷ் குமார் 61,403 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன்மூலம், தேஜஸ்வி யாதவ் 8,461 வாக்குகள் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.