பிரசாந்த் கிஷோர் ANI
இந்தியா

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜுக்கு ‘பூஜ்ஜியம்’!

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறவில்லை...

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறவில்லை.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 192 தொகுதிகளில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. பாஜக மட்டும் 85 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி பகல் 1 மணி நிலவரப்படி, வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி, பிகார் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறவில்லை.

பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 இடங்களில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சி, மக்களின் மூன்றாவது தேர்வாக இருக்கும் என்று கருதப்பட்டது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில்கூட குறைந்தது 2 முதல் 5 இடங்களில் ஜன் சுராஜ் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் 5 தொகுதிகள் வரை முன்னிலை பெற்ற ஜன் சுராஜ், தற்போது அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.

'Zero' for Prashant Kishor's Jan Suraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலை வழக்கில் சிறையில் உள்ள ஜேடியு வேட்பாளர் வெற்றி! 28,000 வாக்குகள் வித்தியாசத்தில்..!

பிகார் தேர்தல் வெற்றி! இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜக! | Pondicherry

எஸ்ஐஆர் குறித்து தமிழ்நாடே புலம்பிக் கொண்டிருக்கிறது! முதல்வர் ஸ்டாலின்

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை - நேரலை

ரொனால்டோவிற்கு 22 ஆண்டுகளில் முதல் ரெட் கார்டு... உலகக் கோப்பையில் சிக்கல்!

SCROLL FOR NEXT