கர்நாடகத்தின் பெலகாவி வனவிலங்கு பூங்காவில், இரண்டு நாள்களில் 28 அரிய வகை மான்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெலகாவியில் உள்ள கிட்டூர் ராணி சென்னம்மா வனவிலங்கு பூங்காவில், அரிய வகை விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு 8 பிளாக் பக் என்றழைக்கப்படும் அரிய வகை மான்கள் உயிரிழந்தன.
இந்த நிலையில், அந்த பூங்காவில் இன்று (நவ. 15) சுமார் 20 பிளாக் பக் வகை மான்கள் உயிரிழந்துள்ளதாக, உதவி வனப் பாதுகாவலர் நாகராஜ் பால்ஹசூரி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அங்கு விரைந்த கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த மான்களின் உடல்களில் உடற்கூராய்வு சோதனை செய்து மாதிரிகளைச் சேகரித்துள்ளனர்.
இந்த மாதிரிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பன்னர்கட்ட விலங்கியல் பூங்காவிற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, பாக்டீரியா தொற்றினால் இந்த மான்கள் அனைத்தும் உயிரிழந்திருக்கக் கூடும் என வனவிலங்கு பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.
இருப்பினும், மான்களின் உயிரிழப்பிற்கான முழுமையான காரணம் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் சோதனையின் முடிவுகள் வெளியான பின்னரே தெரிய வரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: தற்கொலைத் தாக்குதல்களில் கார்கள்! பாதுகாப்புத் துறைக்கு விடுக்கப்படும் சவால்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.