கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகளால் கடும் பணிச்சுமை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் மீது புகார் கூறி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்(பி.எல்.ஓ.க்கள்) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எல்.ஓ.க்கள் வீடுவீடாகச் சென்று எஸ்ஐஆர் படிவங்களை வழங்குதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்திடருந்து நள்ளிரவு வேளைகளிலும் புதுப்புது உத்தரவுகள் ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்படுவதாகவும், மின்னணு முறையில் தரவு பதிவு செய்யக்கோரி திடீரென உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகவும் அலுவலர்கள் குற்றஞ்சாட்டினர். இதனால் பணிச்சுமை தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரிப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்களே. இந்த நிலையில், அவர்கள் பள்ளிகளில் பாடங்களை முடித்துவிட்டு தேர்தல் பணிகளை கவனிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். அப்படிப்பட்ட சூழலில், திடீரென வரும் உத்தரவுகளால் பணிகளை சரிவர கவனிக்க முடியவில்லை என்று அவர்கள் புலம்புகின்றனர்.
தேர்தல் ஆணைய நடவடிக்கைகளுக்கு எதிராக சிலிகுரி மற்றும் ஹௌராவில் முழக்கமிட்டு அலுவலர்கள் சனிக்கிழமை(நவ. 15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.