பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி படுதோல்வியைச் சந்தித்த நிலையில், தேர்தல் முடிவு குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை சந்தித்தார்.
பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக நடந்துமுடிந்த நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பெரும்பான்மையுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க ராகுல் காந்தி, கார்கேவுடன் சந்திப்பு நிகழ்த்தினார். இருவருடன் ஏஐசிசி பொதுச் செயலாளர், அமைப்பு, கே சி வேணுகோபால், கட்சி பொருளாளர் அஜய் மக்கன் மற்றும் ஏஐசிசி பிகார் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு ஆகியோர் இணைந்தனர்.
பிகாரில் உள்ள 243 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்ட 61 இடங்களில் ஆறு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால், அதன் மோசமான செயல்திறன் குறித்து விவாதிக்க தலைவர்களை சந்தித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
2010 க்குப் பிறகு, நான்கு இடங்களில் மட்டும் வென்ற நிலையில், பிகாரில் கட்சியின் இரண்டாவது மோசமான தோல்வி இதுவாகும்.
பிகார் தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக ராகுல்காந்தி வெள்ளிக்கிழமை கூறினார்.
தேர்தல் ஆரம்பத்திலிருந்தே நியாயமாக இல்லை, அதனால்தான் கட்சியால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி முடிவுகளை ஆழமாக மதிப்பாய்வு செய்யும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிக்க: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.