ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று சந்தித்தார்.
தில்லி ஜன்பத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நவீன் யாதவை அறிமுகம் செய்துவைத்தார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் அவரது இல்லத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்தித்தார்.
இந்த சந்திப்புகள் தொடர்பான புகைப்படங்களையும் ரேவந்த் ரெட்டி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) எம்எல்ஏவாக இருந்த மகந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் மரணமடைந்தாா்.
இதன் காரணமாக இடைத்தோ்தல் நடைபெற்ற இத்தொகுதியில் ஆளும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட நவீன் யாதவ், 98,888 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். பிஆா்எஸ் வேட்பாளா் மகந்தி சுனிதா கோபிநாத்துக்கு 74,259 வாக்குகளும், பாஜக வேட்பாளா் தீபக் ரெட்டிக்கு 17,061 வாக்குகளும் கிடைத்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.