ஜம்மு-காஷ்மீரில் காரும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 4 பேர் பலியாகினர்.
ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள பாலார் என்ற இடத்தில் சனிக்கிழமை இரவு டாடா சுமோ காரும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விபத்துக்குப் பிறகு ஒன்பது பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் நான்கு பேர் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஐந்து பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தனர்.
இதனிடையே விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்ததோடு, விபத்துக்கான காரணத்தை முழுமையாக விசாரிக்க விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.