கேரளத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் தரவுகளின்படி, ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் என்று தெரிய வந்துள்ளது.
கேரளத்தில் டிச. 9 மற்றும் 11 ஆகிய இரு நாள்கள் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள புதிய வாக்காளர் பட்டியல் தரவுகளின்படி, கேரளத்தில் மொத்தமுள்ள வாக்காளர் எண்ணிக்கை 2,86,62,712 ஆக உள்ளது.
அவர்களுள் பெண் வாக்களர்கள் 1,51,45,500 ஆகவும், ஆண் வாக்காளர்கள் 1,35,16,923 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்கள் 289 பேர் வாக்காளர்களாக உள்ளனர். வெளிநாடுவாழ் இந்திய வாக்காளர்களாக 3,745 பேர் உள்ளனர்.
துணை வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 2,66,679 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், 34,745 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.