தில்லியில் பங்குச்சந்தை முதலீட்டில் அதிக வருமானம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.3.38 லட்சம் மோடியில் ஈடுபட்ட இரண்டு பேரை தில்லி போலீஸார் கைது செய்தனர்.
பங்குச்சந்தை முதலீடுகளில் லாபகரமான வருமானத்தைப் பெற்றுத் தருவதாக ஏக்தா சச்தேவா என்ற பெண்ணிடம் ரூ.3.38 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக பெண் அளித்த புகாரின்பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அவரது புகாரின் அடிப்படையில் செப். 18 அன்று முதல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமுல்யா சர்மா(23) மற்றும் கர்வித் சர்மா(26) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு வங்கி கணக்களுக்கு பணப் பரிமாற்றம் செய்து, பல ஏடிஎம்களைப் பயன்படுத்தி பணத்தை எடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கண்காணிக்கப்பட்டது. மேலும் மோசடி பரிமாற்றத்திற்கு முன்பு அமுல்யா சர்மாவால் அந்த எண் இயக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அதே அமுல்யா கணக்கிலிருந்து மற்ற கணக்குகளுக்கு 50-க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி வங்கிக் கணக்குகளைத் துவங்குவதிலும், போலி முதலீட்டுத் திட்டங்களுடன் இணைக்கப்பட்ட சைபர் மோசடியைக் கையாளுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் எனத் தெரிய வந்தது. ஏக்தா சச்தேவா என்ற பெண்ணிடம் மோசடி செய்யப்பட்டுப் பெறப்பட்ட 3.38 லட்சம் பணத்தை கிரிப்டோகரன்சி வாங்குவதற்குத் திருப்பி விடப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
சோதனைகளுக்குப் பிறகு அமுல்யா, கர்வித் கைது செய்யப்பட்டனர், அதே நேரத்தில் போலிக் கணக்குகளின் செயல்பாட்டில் ஈடுபட்டதற்காக சுஜல் என்பவர் விசாரிக்கப்பட்டார். குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு மொபைல் போன்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
காவல்துறையின் கூற்றுப்படி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிக்கும் பி.ஏ (ஹானர்ஸ்) மாணவியான அமுல்யா, நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி சைபர் மோசடிகளில் வருமானத்தைப் பெற்று அவற்றைத் திசைதிருப்பிய முக்கிய நபராக இருந்தார். 12 ஆம் வகுப்பு வரை படித்த கர்வித் சர்மா கணக்குகளைக் கையாள அவருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.
மூன்றாவது குற்றவாளியான 20 வயது சுஜல் சபர்வால் விசாரணையின்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சம்மன் அனுப்பப்படும்போது விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டது. அவர் நகரத்தை விட்டு வெளியேற விரும்பினால் காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட மற்ற உறுப்பினர்களைக் கண்டறிய விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: பிரியங்கா காந்தி மகன் அரசியலுக்கு வருகிறாரா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.