ஆந்திரப் பிரதேசத்தில், 6 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தின், மாரேடுமில்லி வனப்பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்று (நவ. 18) காலை 6.30 மணியளவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, ஆந்திரம், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் காவல் துறையினர் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில்; அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.
இந்தத் தாக்குதல்களில், மாவோயிஸ்டுகளின் மூத்த தளபதி மாத்வி ஹித்மா (வயது 43), அவரது மனைவி மட்கம் ராஜே உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, காவல் துறை மற்றும் துணை ராணுவப் படையினர் மீதான 26 தாக்குதல் வழக்குகளிலும், ஏராளமான கொலை வழக்குகளிலும் தொடர்புடைய மாவோயிஸ்ட் தளபதி ஹித்மா ரூ.50 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார்.
முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் நாட்டிலுள்ள அனைத்து மாவோயிஸ்டுகளும் அழிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: எஸ்ஐஆர் பணிகள்: மாநிலத் தலைவர்களுடன் ராகுல், கார்கே ஆலோசனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.