ரஷிய அதிபரின் இந்தியப் பயணம் குறித்து ரஷிய துணைப் பிரதமர் டெனிஸ் மண்டுரோவை நேரில் சந்தித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தில்லியில், வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 23 ஆவது இந்தியா - ரஷிய உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியா வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஷிய அதிபர் புதினின் இந்தப் பயணத்தின் ஏற்பாடுகள் குறித்து, மாஸ்கோவில் ரஷியாவின் துணைப் பிரதமர் டெனிஸ் மண்டுரோவை, இன்று (நவ. 19) நேரில் சந்தித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இத்துடன், மாஸ்கோவில் நேற்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பில், அவரது தில்லி பயணம் மற்றும் உச்சி மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து ரஷிய அதிபரிடம் அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்துரைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 21 ஆவது ரஷியா - இந்திய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவுக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லி செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்தில் வெடிகுண்டை உருவாக்கினாரா உமர்? தகவல்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.