மணிப்பூர் மாநிலத்தில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 39 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், நிகழாண்டு (2025) துவங்கியது முதல் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்து வருகின்றது. இதில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 39 டெங்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் 10,846 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில்; 5,166 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அதிகப்படியாக மேற்கு இம்பால் மாவட்டத்தில் 3,517 பேரும், கிழக்கு இம்பாலில் 1093 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, டெங்கு பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மணிப்பூர் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, மணிப்பூரில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 2,463 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டதாகவும்; அதில், 5 பேர் பலியானதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜார்க்கண்டில் பாம்பு விஷம் கடத்திய கும்பல் பிடிபட்டது: ரூ.80 கோடி விஷம் பறிமுதல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.