ஆந்திரம் மாநிலத்தில் புதிதாக 3 மாவட்டங்களை உருவாக்க அந்த மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா் 
இந்தியா

ஆந்திரத்தில் புதிதாக 3 மாவட்டங்கள் உதயம்: மொத்த எண்ணிக்கை 29-ஆக உயா்வு

தினமணி செய்திச் சேவை

ஆந்திரம் மாநிலத்தில் புதிதாக 3 மாவட்டங்களை உருவாக்க அந்த மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26-லிருந்து 29-ஆக உயா்ந்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் குழு அறிக்கையின் ஆய்வுக்குப் பிறகு, இந்த 3 புதிய மாவட்டங்கள் மற்றும் 5 வருவாய் கோட்டங்களின் உருவாக்கத்துக்கு முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு ஒப்புதல் அளித்தாா்.

மாா்க்கபுரம், மதனப்பள்ளி, போலாவரம் ஆகியவை புதிய மாவட்டங்களாக இருக்கும். மேலும், போலாவரம் மாவட்டத்தின் தலைமையிடமாக ராம்பச்சோதவரம் இருக்கும் என்று அதிகாரபூா்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, அனகாபள்ளி மாவட்டத்தில் நக்கப்பள்ளி, பிரகாசம் மாவட்டத்தில் அத்தங்கி, புதிய மதனப்பள்ளி மாவட்டத்தில் பிலோ், நந்தியாலா மாவட்டத்தில் பனகனப்பள்ளி, ஸ்ரீசத்ய சாய் மாவட்டத்தில் மடகாசிரா ஆகிய 5 புதிய வருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் நிா்வாகச் சீா்திருத்தத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாவட்ட மற்றும் வருவாய் கோட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கத்தில் ரூ.1.62 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்

இடைக்கட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை

டிப்பா் லாரி மோதி 20 ஆடுகள் உயிரிழப்பு

ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி மதிப்பெண் அனைத்து வகுப்பினருக்கும் 50 சதவீதமாக குறைக்க வலியுறுத்தல்

ஆட்சியரகத்தில் பழைய வாகனம் டிச. 10-இல் பொது ஏலம்

SCROLL FOR NEXT