தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
பிகார் மாநிலத்தைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எஸ்ஐஆர் பணிகளுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனிடையே எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருவதாகக் கூறப்படுகிறது. மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்ட பலரும் இறக்க நேரிட்டதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.
இந்நிலையில் எஸ்ஐஆர் பணிகளை நிறுத்தக்கோரி மேற்குவங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் இன்று(நவ.25) வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
பங்கான் சந்த்பாரா பகுதியில் இருந்து தாகூர் நகரில் உள்ள மத்வா வரை 3 கிமீ தூரத்திற்கு மமதா பேரணியில் ஈடுபட்டார். மேற்கு வங்க அமைச்சர்கள், திரிணமூல் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
தொடர்ந்து தாகூர் நகரில் உள்ள பள்ளியில் அவர் உரையாற்றினார்.
"ரயில்கள், விமானங்கள், எல்லைகள் ஆகிய மத்திய அரசின் அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. பாஸ்போர்ட், சுங்கம், கலால் வரி அனைத்தையும் மத்திய அரசு கவனித்துக்கொள்கிறது. பின்னர் எப்படி மேற்கு வங்கத்தில் வங்கதேசத்தினரை நாங்கள் ஊடுருவ வைத்தோம்?
எஸ்ஐஆர் பணிகளை அவசரம் அவசரமாகச் செய்கிறார்கள். மக்களாகிய உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் மத்திய அரசும் நீக்கப்பட வேண்டும். இவ்வளவு அவசரமாக ஏன் எஸ்ஐஆர் பணிகள் நடக்கின்றன?
ஆளும் கட்சியைப் பற்றி எனக்கு எந்த பயமும் இல்லை. பாஜக அரசியல் ரீதியாக என்னை எதிர்த்துப் போராடி தோற்கடிக்க முடியாது. 2026ல் பாஜக ஆட்சி இருக்காது" என்று பேசினார்.
இதையும் படிக்க |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.