மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி (கோப்புப் படம்)  PTI
இந்தியா

அஜீத் பவார் மரணம்! சர்ச்சையாக்கும் மமதா பானர்ஜி!

அஜீத் பவார் மரணம் குறித்து மமதா பானர்ஜியின் கருத்தால் சர்ச்சை...

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் மரணம் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்புவதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், அஜீத் பவார் விமான விபத்து குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து பாராமதிக்கு சென்ற அஜீத் பவாரின் தனி விமானம் புதன்கிழமை காலை தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.

தரையில் மோதிய விமானம் தீப்பிடித்து எரிந்த நிலையில், விமானத்தில் பயணித்த அஜீத் பவார் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த விபத்து தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

”அஜீத் பவாரின் மரணச் செய்தியால் அதிர்ச்சியடைந்தேன். அவரின் மரணம் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு. இந்த நாட்டில் அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. அவர் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, சரத் பவாருடன் இணைவது குறித்து பரிசீலித்து வந்தார்.

இன்று நடந்த சம்பவம் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். உச்ச நீதிமன்றத்தின் மீது மட்டுமே எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மற்ற விசாரணை அமைப்புகள் தங்களின் சுதந்திரத்தை இழந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அஜீத் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Ajit Pawar's death! Mamata Banerjee stirs up controversy!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட் எதிர்பார்ப்பு! காப்பீடு, வீட்டுக் கடன்களுக்கு புதிய வரி விதிப்பு முறையில் சலுகை?

ஐசிசி டி20 தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறிய சூர்யகுமார்!

அஜீத் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளான CCTV காட்சி!

உத்தமபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்!

யு19 உலகக் கோப்பை: வாழ்வா - சாவா போட்டியில் மே.இ.தீ!

SCROLL FOR NEXT