உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் முனைவர் மமதா! எத்தனை பட்டங்கள் முடித்திருக்கிறார்?
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் பட்டப்படிப்பு பற்றி...
உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளுக்கு எதிரான வழக்கில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியே நேரில் வந்து தனது வாதங்களை முன்வைக்கவுள்ளார்.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் நடவடிக்கையின்கீழ் வரைவு வாக்காளா் பட்டியலில் 58 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன. மேலும் 1.25 கோடி வாக்காளா்கள் முரண்பாடான தகவல்களை வழங்கியதாக வகைப்படுத்தப்பட்டு அவா்களிடம் உரிய அடையாள ஆவணங்களை இந்திய தோ்தல் ஆணையம் கோரியுள்ளது.
இந்த நிலையில், எஸ்ஐஆருக்கு எதிராக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் உள்பட பல்வேறு தரப்பினா் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு இன்று விசாரிக்கிறது.
Advertisement
Advertisement
சட்டப் படிப்பை (எல்எல்பி) நிறைவு செய்துள்ள மம்தா பானா்ஜியே தனது தரப்பு வாதங்களை நீதிபதிகள் முன்னிலையில் முன்வைக்கவுள்ளார்.
மமதா எத்தனை பட்டம் முடித்துள்ளார்?
மக்களவை உறுப்பினர் வலைதளத்தில் உள்ள எம்பிக்களின் தரவுகளில் மமதா பானர்ஜியின் சுயவிவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.
அதில், மமதா பானர்ஜி, பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பி.எட்., எல்.எல்.பி., பி.எச்டி. ஆகிய பட்டப்படிப்புகளை நிறைவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொல்கத்தா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் கிழக்கு ஜார்ஜியா பல்கலைக்கழகம், சிக்ஷாயதன் கல்லூரி, ஜோகேஷ் சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரி ஆகியவற்றில் படித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dr. Mamta arguing in the Supreme Court! How many degrees has she completed?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.