நாக்பூரில் சிகரெட் லைட்டரை தர மறுத்ததாகக் கூறி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் கெடம் மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் கோண்டேன் (33) ஆகியோரிடம் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சிகரெட் லைட்டரை கேட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் சிகரெட் லைட்டரை வழங்க மறுத்துள்ளனர்.
இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் இருவரையும் கற்கள் மற்றும் கத்திகளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதலில் கெடம் பலியானார். மேலும் கோண்டேன் பலத்த காயமடைந்தார்.
அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.