அரசியலமைப்பின் மீது அக்கறை இருப்பதாக பாஜக-ஆர்எஸ்எஸ் பாசங்குத்தனம் செய்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
நாட்டின் அரசமைப்புச் சட்ட தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. நிகழாண்டு அரசமைப்புச் சட்ட தினம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 76-ஆவது ஆண்டைக் குறிக்கிறது.
இந்த நிலையில், பாஜக-ஆர்எஸ்எஸ் அரசியலரமைப்பின் மீது அக்கறை இருப்பதாக பாசங்கு செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
இந்தியாவின் அடையாளங்களாக இருக்கும் நீதி, சமத்துவம், சுதந்திரம், பரஸ்பர சகோதரத்துவம் ஆகியவை இன்று பாஜக ஆட்சியின் கீழ் ஆபத்தில் உள்ளது.
காலனித்துவத்தின் ஆபத்துகள் குறித்து மோடி நமக்குப் போதிக்கிறார், ஆனால் சுதந்திரப் போராட்டத்திலும் தேசிய இயக்கத்திலும் இந்த நாட்டு மக்களுடன் ஒரு நிமிடம் கூட நிற்காமல், பிரிட்டிஷ் அடிமைத்தனத்திற்குச் சேவை செய்த அதே சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
நமது அமைப்புகளை யார் சேதப்படுத்துகிறார்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். பாஜக-ஆர்எஸ்எஸ் மக்கள் அரசியலமைப்பை அவமதிப்பதில் மும்முரமாக உள்ளனர். அதனால்தான் அரசியலமைப்பின் மீதான அவர்களின் மரியாதை வெறும் பாசாங்கு, போலித்தனம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
அரசியலமைப்பின் நகல்களை எரித்தவர்கள், இப்போது பாபாசாகேப்பின் சிலைக்கு மலர்களைச் செலுத்தி வருகின்றனர். இது இந்தியாவின் அரசியலமைப்பிற்கும் நமது முன்னோர்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அவர் கூறினார்.
அம்பேத்கரும், ஜவஹர்லால் நேருவும் அரசியலமைப்புச் சபையுடன் இணைந்து அரசியலமைப்பை உருவாக்கியது மட்டுமல்லாமல், ஜனநாயகம் உச்சத்தில் ஆட்சி செய்யும் இந்தியாவையும் கட்டியெழுப்பினர் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ்: மு.க. ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.