தில்லி-என்சிஆரில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதைக் கருத்தில்கொண்டு காற்று மற்றும் நீர் சுத்திகரிப்பான்கள் மீதான 18 சதவிகித ஜிஎஸ்டியை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
சுத்தமான காற்றும், சுத்தமான நீர் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகள்.
தில்லி மற்றும் வட இந்தியா முழுவதும், காற்று மாசு ஆபத்தானதாக மாறிவிட்டது. தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக அரசு பொதுமக்களிடமிருந்து அதிக வரிகளை வசூலிக்கிறது மத்திய அரசு.
காற்று மாசுவிலிருந்து தங்கள் குடும்பங்களைப் பாதுகாக்க மக்கள் காற்று சுத்திகரிப்பான்களை வாங்குகிறார்கள். ஆனால் 18 சதவிகித ஜிஎஸ்டியை வசூலிப்பதால் மக்கள் வாக்குவதற்கு தயங்குகின்றனர். மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது.
காற்று மற்றும் நீர் சுத்திகரிப்பான்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை உடனடியாக நீக்க வேண்டும் என்று முன்னாள் ஆம் ஆத்மி தலைவர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
தீர்வுகளை வழங்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துவதை நிறுத்துங்கள்.
தில்லியில் காற்று மாசு மிகவும் மோசம் பிரிவில் சென்றுகொண்டிருக்கின்றது. வரும் வாரங்களில் இது மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை அமைப்பு கூறியுள்ளது.
இதனிடையே, குளிர்காலத்தில் தில்லியின் காற்றின் தரம் மிகவும் மோசம் மற்றும் கடுமையான வகைகளுக்குள் சரிந்து வருவதால், ஆஸ்துமா நோயாளிகள், குழந்தைகள், இதய பிரச்னை உள்ளவர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தகுந்த பரிசோதனையின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.