முகப்பு
இந்தியா

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்: 80 ஆக உயர்ந்த பலி!

வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் தாக்கம் இலங்கையை புரட்டிப்போட்டுள்ளதைப் பற்றி..

Updated On : 29 நவம்பர், 2025 at 5:52 AM
இலங்கை
பகிர்:

டிட்வா புயல் காரணமாக இலங்கையில் பெய்துவரும் கனமழை, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலால் இலங்கையில் இடியுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. திரிகோணமலை, பதுடீல்லா, மாத்தறை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இலங்கையில் வெள்ளம் நிலச்சரிவால் கடந்த மூன்று நாள்களில் இதுவரை 80 உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் பலத்த மழை, நிலச்சரிவில் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், இலங்கையில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளன.

கடந்த வாரம் இலங்கை கடுமையான வானிலை மாற்றங்களை எதிர்கொள்ளத் தொடங்கியது. இதனிடயே, இலங்கை கடல் பகுதியில் உருவாகியுள்ள "டிட்வா' புயலால் வடக்கு, வடக்கு மத்திய மாகாணங்கள் மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சூறைக் காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், டிட்வா பயுலால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக சனிக்கிழை சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் மற்றும் வருகை தரும் 54 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 12 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால், பயணிகள் தங்களுக்கான விமான நிறுவன அலுவலகங்களை தொடா்புகொண்டு விமானத்தின் புறப்பாடு குறித்த தகவல்களை உறுதி செய்த பின்னா் பயணத்தை மேற்கொள்ள விமானநிலைய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டு இலங்கைக்கு இந்திய துணை நிற்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் அங்கு நிலைமை மேம்படுத்த தேவையா உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

அதன்படி, ஆப்பரேஷர் சாகர் பந்து என்ற பெயர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அலங்கைக்கு நிவாரணப் பொருள்கள் மற்றும் முக்கிய மனிதாபிமான உதவிகளை இந்தியா செய்து வருகிறது.

இந்திய விமானப்படை மூலம், இலங்கைக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

summary

The death toll from heavy rains and landslides in Sri Lanka due to Cyclone Titva has risen to 80.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.