முகப்பு
இந்தியா

குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Updated On : 30 நவம்பர் 2025, 12:08 pm IST
அனைத்துக் கட்சி கூட்டத்தில்... - படம் - எக்ஸ்
பகிர்:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிக்குப் பிறகு முதல்முறை நாடாளுமன்ற இரு அவைகளும் கூடவுள்ளன.

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை விடுமுறை நாள்கள் நீங்களாக மொத்தம் 15 அமர்வுகளுக்கு குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இதில் 10 முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

எனினும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், தில்லி கார் வெடிப்பு, மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் தலைநகர் தில்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்கும் இதில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்வைத்து ஒத்துழைப்பு தருமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஆளும் அரசு கோரிக்கை வைக்கும் எனத் தெரிகிறது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அர்ஜுன் ராம் மேக்வால், ஆகியோர் அரசு சார்பில் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கெளரவ் கோகோய், பிரமோத் திவாரி, திமுக எம்.பி. டி.ஆர். பாலு, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிக்க | 10 முக்கிய மசோதாக்கள்: எதிா்க்கட்சிகள் எழுப்பும் சா்ச்சைகள்!

summary

all-party meeting ahead of winter session of Parliament

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.