குஜராத்தில் பாஜகவின் மாநிலப் பிரிவின் புதிய தலைவராக குஜராத் அமைச்சரும், ஓபிசி தலைவருமான ஜெகதீஷ் விஸ்வகர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில பாஜக தலைவர் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அதிகாரியான மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், காந்திநகரில் உள்ள கட்சி தலைமையகமான கமலமில் நடைபெற்ற மூத்த மாநிலத் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் கூட்டத்தில் விஸ்வகர்மாவின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அகமதாபாத்தின் நிகோல் தொகுதி பாஜக எம்எல்ஏ ஜெக்தீஸ் விஸ்வகர்மா (52), இவர் மாநில தலைவராகக் கூட்டுறவு, உப்புத் தொழில்கள், சிறு குறு நடுத்தர தொழில், குடிசை, காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் துறைகளுக்கான அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவராக இருந்த சி.ஆர். பாட்டீலின் மூன்று ஆண்டு பதவிக்காலம் ஜூலை 2023ல் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து குஜராத் பாஜக தலைவராகத் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.
குஜராத் பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜெக்தீப் விஸ்வகர்மா மட்டும் மனுதாக்கல் செய்த நிலையில், போட்டியின்றி பாஜக மாநில தலைவராக விஸ்வகர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
விழாவிற்கு முன்பு, விஸ்வகர்மா அகமதாபாத்தின் தாக்கர்பநகரில் உள்ள தனது இல்லத்திலிருந்து ஏராளமான கட்சித் தொழிலாளர்களுடன் ஒரு பேரணியை நடத்தினார். குஜராத் பாஜகவின் தலைவராகப் பணியாற்றும் பொறுப்பை தனக்கு வழங்கிய கட்சியின் உயர்நிலைத் தலைமைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இதையும் படிக்க: தவெக தலைவர் விஜய்க்கான பாதுகாப்பு உயர்த்தப்படுகிறதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.