மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கிலும், சிக்கிமிலும் நெருக்கடியைச் சமாளிக்க சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா உறுதியளித்தார்.
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். டார்ஜிலிங்கில் சிக்கியுள்ள 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. அதேபோன்று கடந்த சில நாள்களாக சிக்கிமில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஹிமாந்தா சர்மா வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
கனமழை காரணமாக டார்ஜிலிங் மற்றும் வடக்கு வங்க மாநிலத்தின் பிற இடங்களில் ஏற்பட்ட பேரழிவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்.
டார்ஜிலிங் மாவட்டத்தில் பேரழிவு தரும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. பேரிடர் மேலாண்மைப் பணியாளர்கள் திங்கள்கிழமை மீட்புப் பணிகளைத் தொடர்ந்து வருகின்றன. மேலும் பலர் மாயமாகியுள்ளனர்
அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க அரசுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். நெருக்கடியான நேரத்தில் சிக்கிமில் உள்ள நமது சகோதர சகோதரிகளுடன் அஸ்ஸாம் மக்கள் தோளோடு தோள் நின்று உதவுவார்கள் என்றும் அவர் கூறினார்.
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவைச் சமாளிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அஸ்ஸாம் அரசு உறுதி பூண்டுள்ளது என்று சிக்கிம் முதல்வர் பிஎஸ் தமாங் கோலேயை தனது பதிவில் குறிப்பிட்டு சர்மா கூறினார்.
இதையும் படிக்க: ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 6 நோயாளிகள் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.