உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நீதிமன்ற அறையில் காலணியை வீசி தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்குரைஞர் ஒருவர் காலணியை வீச முயற்சித்துள்ளார். நல்வாய்ப்பாக உச்ச நீதிமன்ற காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்தியாவின் தலைமை நீதிபதி மீதான தாக்குதலானது நமது நீதித்துறையின் மாண்பின் மீதான தாக்குதல் மட்டுமில்லாது நமது அரசமைப்பின் மீதான தாக்குதலாகும். இதுபோன்ற வெறுப்புச் செயல்களுக்கு நமது நாட்டில் இடமில்லை. இது கண்டிக்கத்தக்க நிகழ்வு’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் முயற்சி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.