கோப்புப் படம் 
இந்தியா

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 16 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கரில் 16 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சத்தீஸ்கர் மாநிலத்தில், வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 16 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர்.

நாராயணப்பூர் மாவட்டத்தில், கூட்டாக ரூ.70 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த 16 பேர், இன்று (அக். 8) பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

இந்தக் குழுவில், பல்வேறு குற்ற நடவடிக்கைகளினால் தலா ரூ.8 லட்சம் வெகுமதிகள் அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் துணைத் தளபதி மர்காம் (எ) ரத்தன் மற்றும் மனோஜ் துக்கா (எ) ஷங்கர் ஆகியோரும் சரணடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சரணடைந்துள்ளவர்களின் மறுவாழ்வுக்காக அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் காசோலை அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள நக்சல்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

இதில், நிகழாண்டில் (2025) மட்டும் சத்தீஸ்கரில் 192 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: முதல்முறை ஆஸ்திரேலியா சென்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்!

In Chhattisgarh, 16 Maoists who were wanted with a collective reward of Rs 70 lakh have surrendered.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்திரிகையாளர் சந்திப்பில் காந்தார படக்குழுவினர் - புகைப்படங்கள்

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ நடவடிக்கையில் 2 வீரர்கள் மாயம்! தேடுதல் பணி தீவிரம்!

அமித் ஷாவை எப்போதும் நம்பாதீர்கள்: மோடியை எச்சரித்த மமதா!

இரவில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT