கொல்கத்தாவில் முதல்வர் மமதா பானர்ஜியின் இல்லம் அருகே ஏர்கன் வைத்திருந்த நபர் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலம், தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஹஸ்ரா கிராசிங்கில் முதல்வர் மமதா பானர்ஜியின் இல்லத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் தனது பையில் ஏர்கன்னுடன் நபர் ஒருவர் வியாழக்கிழமை கைசெய்யப்பட்டார்.
தனியார் பள்ளியின் ஆசிரியர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட தேபஞ்சன் என்கிற அந்த நபர், காளிகட் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
உரிம ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு அந்த நபரை போலீஸார் விடுவித்ததாக மூத்த அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
விசாரணையில் ஏர்கன்னை ஏன் இவ்வாறு எடுத்துச் செல்கிறார் என்று போலீஸார் கேட்டதாக அதிகாரி மேலும் கூறினார். திரிணமூல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜியின் வீடும் சம்பவ இடத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.