உணவுப் பட்டியல் 
இந்தியா

ராவல்பிண்டி சிக்கன் டிக்கா, பஹவல்பூர் நான்: விமானப் படை விழா மெனு

பஞ்சாபில் நடைபெற்ற விமானப் படை நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த மெனு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய விமானப் படையினர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் வழங்கப்பட்ட விருந்தில், பாகிஸ்தான் நகரங்கள் பெயரில் மெனுக்களை அமைத்து மாஸ் காட்டப்பட்டிருக்கிறது.

ராவல்பிண்டி சிக்கன் டிக்கா, பஹவல்பூர் நான், பாலாகோட் திரமிசு போன்றவை, பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப் படைத் தளத்தில் அக். 8ஆம் தேதி நடைபெற்ற விமானப் படை நாள் விழாவில், அளிக்கப்பட்ட மெனுக்களின் பெயர்கள்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் எல்லையில் இருந்த பயங்கரவாத முகாம்களை அழித்தொழித்ததன் அடையாளமாக விமானப் படை நடத்திய விருந்து நிகழ்ச்சியில் அளிக்கப்பட்ட மெனுக்களுக்கு, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் இருந்த நகரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் வகையில், பஞ்சாப் மாநிலத்தில், இவ்வாறு உணவுப் பொருள்களுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது சமூக சலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

பொதுவாக நம்ம ஊர்களில், ஒரு உணவுப் பொருள் தயாரிக்கப்படும் இடத்தின் பெயர் அதற்கு அடைமொழியாக இணைந்துவிடும். மைசூரு போண்டா, திருநெல்வேலி அல்வா, ஹைதராபாத் பிரியாணி போன்றவை அடங்கும். ஆனால், தற்போது, விமானப் படையால் வறுத்தெடுக்கப்பட்ட நகரங்களின் பெயர்கள் உணவுப் பொருள்களுக்கு சூட்டப்பட்டுள்ளது.

இந்த மெனுவில், கடந்த 2019ஆம் ஆண்டு பாலாகோர் விமானப் படை தளம் தகர்க்கப்பட்டது மற்றும் ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போலாரி, முரித்கே உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

ராவல்பிண்டி சிக்கன் டிக்கா, ரஃபிகு ராஹ்ரா மட்டன், பொலாரி பனீர் மேதி மலாய், சுக்குர் ஷாம் சவேரா கோஃப்தா, சர்கோதா தால் மகானி, பஹவல்பூர் நான், பாலாகோட் திரமிசு, முஸாஃபராபாத் குல்ஃபி ஃபலூடா, முரித்கே மீதான பான் போன்றவை, வரிசையாக உணவுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த நகரங்களில் எல்லாம் இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்திய நிலையில், அந்த நகரங்களின் பெயர்களில் உணவுகள் பரிமாற்றப்பட்டிருக்கிறது. எப்போதும் வழங்கப்படும் உணவுகள்தான் என்றாலும், அதற்கு அடைமொழியாக, இவ்வாறு பெயர் சூட்டப்பட்டிருப்பது பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேகமாக செல்லும் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்...! பட்ஜெட் குறித்து மோடி!

பட்ஜெட் எதிர்பார்ப்பு! தங்கம் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்குமா?

144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல்

ஓர் ஆண்டில் எத்தனை இ-செலான் பெற்றால் ஓட்டுநருக்கு ஆபத்து?

அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்! சாலைகளில் மலர்தூவி மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT