புது தில்லி: காற்று மாசுபாடு காரணமாக புது தில்லியில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தீபாவளிக்கு மட்டும் 5 நாள்கள் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.
புது தில்லியில் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, பட்டாசு வெடிப்பது என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தீபாவளிக்கு மட்டும் இந்த தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் புது தில்லியில், காற்றுமாசு கடுமையாக இருந்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக, பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளியன்றும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டு வந்தது. இதனால், தில்லியில் பட்டாசுகளை தயாரிப்பது, சேமிப்பது, விற்பனை செய்வது, ஆன்லைனில் விற்பது, வெடிப்பது என அனைத்துக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தில்லியில் தற்போது காற்று மாசுபாடு சற்றுக் குறைந்திருக்கும் நிலையில், சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பின், புது தில்லியில் இந்த ஆண்டு தீபாவளியன்று பட்டாசு வெடிக்க அனுமதி கிடைத்திருக்கிறது.
சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், தடை உத்தரவை தளர்த்தலாம் என மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டதால், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
ஒருபக்கம், பட்டாசு விற்பனையாளர்களும், மக்களும் இந்த உத்தரவால் மகிழ்ச்சி அடைந்தாலும், தில்லியின் காற்று மாசு மிக மோசமான நிலையை அடையும் என சுற்றுசூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிக்க... டிராய் என்ற பெயரில் வரும் ஆள்மாறாட்ட ஐவிஆர் அழைப்புகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.