மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் தேஜஸ்வி யாதவ், சிபிஐ பொதுச் செயலர் டி. ராஜா. படம்: பிடிஐ
இந்தியா

ராகுலுக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும்..! - பிரசாந்த் கிஷோர் கறார்!

ராகுல் சந்தித்த அதே நிலைமையை நீங்களும் சந்திக்க நேரிடும் என தேஜஸ்வி யாதவுக்கு பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை விடுத்துள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப் பிரதேசத்தின் அமேதியில் ராகுல் காந்தி சந்தித்த அதே நிலைமையை நீங்களும் சந்திக்க நேரிடும் என தேஜஸ்விக்கு பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிகாரில் பேரவைத் தேர்தலில், 243 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவும், நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 25 நாள்களே இருப்பதால், தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன.

முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸின் இந்தியா கூட்டணி மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி தனியாகவும் களம் காணவிருப்பதால் பிகார் தேர்தலின் தற்போதைய நிலவரம் மும்முனைப் போட்டியாக இருக்கிறது.

இந்த நிலையில், சிராக் பாஸ்வான் - பிரசாந்த் கிஷோர் இருவரும் கூட்டணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜன்சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் 51 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டார்.

இந்த நிலையில், ராஷ்டிரிய ஜனதா கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவின் ரகோபூர் தொகுதியில் தான் போட்டியிடவுள்ளதாக பிரசாந்த் கிஷோர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரசாந்த் கிஷோர் பேசுகையில், “ரகோபூர் செல்லலாம் என இருக்கிறேன். போட்டியிடுவது குறித்து முடிவெடுக்க வேண்டும். நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் மக்களைச் சந்தித்து ஆலோசனை நடத்துவேன்.

ரகோபூர் மற்றும் பிற இடங்களில் போட்டியிடுவது குறித்து நாளை முடிவெடுக்கப்படும். மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அது நிறைவேற்றப்படும்” என்றார்.

பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து பேசுகையில், “நான் ரகோபூரில் போட்டியிட்டால் தேஜஸ்வி யாதவ் இரண்டு இடங்களில் போட்டியிட வேண்டும். அமேதியில் ராகுலுக்கு நேர்ந்த கதி ஜேதஸ்வி யாதவுக்கு நேரிடலாம்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பல ஆண்டுகளாகக் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் மண்ணைக் கவ்வியது நினைவுகூரத்தக்கது.

யாதவ் கோட்டையான ரகோபூரை தகர்ப்பாரா பிரசாந்த்?

யாதவ் குடும்பத்தின் கோட்டையான ரகோபூரில் லாலு பிரசாத் யாதவ் இரண்டு முறையும், ராப்ரி தேவி மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் இருவருமே பிகார் முதல்வர் இருக்கையும் அலங்கரித்துள்ளனர்.

இவர்களின் மகனான தேஜஸ்வியும் 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றிபெற்று துணை முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Will face same fate as Rahul Gandhi did in Amethi: PK's warning to Tejashwi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘கிரிண்டா்’ செயலி மூலம் பணம் பறிப்பு: திருநங்கை உள்பட இருவா் கைது

நடாலி ஷிவா் அதிரடி: இங்கிலாந்து 253/9

காவலா் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி உள்பட 3 போ் கைது

போலி ஆவணம் மூலம் ரூ 2.25 கோடி வீட்டு மனை அபகரிப்பு: தேடப்பட்டவா் கைது

தஞ்சாவூரில் நம்ம ஊரு திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT