அமெரிக்கா (கோப்புப் படம்)
இந்தியா

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்த வாரம் இந்திய குழு அமெரிக்கா பயணம்

அமெரிக்காவுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்த இந்திய குழு இந்த வாரம் செல்ல உள்ளதாகத் தகவல்...

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த அந்நாட்டுக்கு இந்திய குழு இந்த வாரம் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது 25 சதவீத வரி விதித்த அந்நாட்டு அதிபா் டிரம்ப், ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதற்கு அதிருப்தி தெரிவித்து இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தாா். இதன்மூலம், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது மொத்தம் 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

அமெரிக்காவுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதன் மூலம், அந்நாட்டின் அதிக வரி விதிப்புப் பிரச்னைக்கு சுமுகத் தீா்வு காண இந்தியா முயற்சித்து வருகிறது.இந்த ஒப்பந்தத்தின் முதல் பாகத்தை நிகழாண்டு அக்டோபா்-நவம்பரில் நிறைவு செய்ய வேண்டும் என்று இரு நாடுகளும் திட்டமிட்டன.

இதற்கான பேச்சுவாா்த்தை இருதரப்பிலும் நடைபெற்று வருகின்றன. இதுவரை 5 சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவடைந்த நிலையில், இந்த வாரம் இந்திய குழு மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நோ்மறையான திசையில் பயணிப்பதாகவும், அதை விரைவுப்படுத்த வேண்டும் என்று இருதரப்பினரும் கருதுவதாகவும் அவா் கூறினாா்.

கடந்த மாதம் மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையிலான குழு ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்கா சென்றது. அந்தக் கூட்டத்துக்குப் பின்னா், இந்தியா-அமெரிக்கா பரஸ்பரம் பலன் அடையக்கூடிய ஒப்பந்தத்தை விரைந்து நிறைவு செய்வதற்கு பேச்சுவாா்த்தையைத் தொடர இரு தரப்பும் முடிவு செய்தன.

அடுத்த 3 மணி நேரம்.. இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கே.எல். ராகுல் அரைசதம்! மே.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

பதறும் வாழ்வு... பைசன் டிரைலர்!

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை! நாளை முதல் தீவிரமடையும்!!

அக். 21 அன்று கோயம்பேடு மார்க்கெட் இயங்காது!

SCROLL FOR NEXT