பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்கட்டமாக 57 வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் நிதீஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
234 தொகுதிகளையுடைய பிகாரில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 101 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடவுள்ள நிலையில், தற்போது 57 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அக்கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா தெரிவித்துள்ளதாவது, சாதி அடிப்படையிலும் வெற்றி பெறும் வாய்ப்புகளுக்கு ஏற்பவும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட்ட தொகுதிகளில் மீண்டும் போட்டியிடவுள்ளனர். பிகார் மக்கள் தொகையில் 36% உள்ள மிகவும் பின்தங்கிய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்திக்கும் அதே கூட்டணியின் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இடையே 5 இடங்களில் போட்டி நிலவி வருகிறது. ஆலெளலி, சோன்பார்சா, ராஜ்கிர், ஏக்மா மற்றும் மோர்வா ஆகிய தொகுதிகளில் போட்டியிட இரு கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
எனினும் இந்த 5 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது. இதில், ஆலெளலி என்பது சிராக் பாஸ்வானின் சொந்த ஊராகும்.
நிதீஷ் குமார் அறிவித்துள்ள வேட்பாளர்கள் பட்டியலில் சிறைக்குச் சென்று தண்டனை அனுபவித்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க | பிகார் தேர்தலுக்கு பின் கர்நாடக அமைச்சரவையில் மாற்றம்? - முதல்வர் சித்தராமையா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.