ராஜஸ்தானில் பேருந்தில் தீப்பற்றிய விபத்தில் பலியான 20 பேருக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் இரங்கல் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மாரில் இருந்து ஜோத்பூருக்கு 57 பயணியருடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, திடீரென தீப்பற்றி எரிந்ததில், அதில் பயணித்த 20 பேர் உடல் கருகி பலியாகினர்; மேலும், 16-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவியும், காயமடைந்தோருக்கு ரூ. 50,000-யும் அறிவித்தார்.
மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும் இரங்கல் தெரிவித்தனர்.
தீப்பற்றிய பேருந்து, 5 நாள்கள் முன்னதாக புதிதாக வாங்கிய பேருந்து என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: காப்பீட்டு தொகைக்காக புது மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவர் கைது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.