உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் மோடி. 
இந்தியா

பிகார் தேர்தல்: பிரதமர் மோடி உள்பட பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு!

பிகார் தேர்தலில் பிரதமர் மோடி உள்பட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் பேரவைத் தேர்தலில் பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி உள்பட 40 பேர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பிகாரில் பேரவைத் தேர்தலில், 243 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவும், நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 20 நாள்களே இருப்பதால், தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன.

முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸின் இந்தியா கூட்டணி மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி தனியாகவும் களம் காணவிருப்பதால் பிகார் தேர்தலின் தற்போதைய நிலவரம் மும்முனைப் போட்டியாக இருக்கிறது.

முதல்கட்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியல்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, ஐக்கிய தனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் தலா 101 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.

இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இன்னும் இழுபறி நிலவிவருகிறது. இந்த நிலையில், பிகார் முதல்கட்டத் தேர்தலுக்கான பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி பெயர் உள்பட 40 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவரைத் தவிர்த்து மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சௌகான், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

BJP releases a list of star campaigners for phase 1 of Bihar Elections

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘தீ’வினை அச்சம்!

தமிழகம் - இத்தாலி இடையே இலக்கிய, கலாசார பரிமாற்றம்: ஜொ்மனியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

கடைகள் மற்றும் நிறுவன பணியாளா்களுக்கு அடிப்படை வசதிகள்: ஆட்சியா் க.தா்பகராஜ் உத்தரவு

விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணா்வு

மருத்துவமனையில் ராஜாத்தி அம்மாள்

SCROLL FOR NEXT