மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. 
இந்தியா

டிரம்பை பார்த்து பயப்படுகிறார் மோடி! ராகுல் காந்தி

டிரம்பை பார்த்து மோடி பயப்படுவதாக ராகுல் விமர்சனம்...

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதனை விமர்சித்துள்ள ராகுல் காந்தி, டிரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”டிரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார்.

1. ரஷியாவின் எண்ணெய்யை இந்தியா வாங்காது என்று முடிவு செய்து டிரம்பை அறிவிக்க அனுமதிக்கிறார்.

2. மீண்டும் மீண்டும் அவமதிக்கப்பட்ட பிறகும் வாழ்த்து செய்தியை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்.

3. அமெரிக்கா செல்லும் நிதி அமைச்சரின் பயணத்தை ரத்து செய்தார்.

4. ஷார்ம் எல்-ஷேய்க் பயணத்தை தவிர்த்தார்.

5. ஆபரேஷன் சிந்தூர் குறித்த டிரம்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

PM Modi is frightened of Trump - Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்ணும் கண்ணும் கலந்துவிட்டது... சான்யா மல்ஹோத்ரா!

தில்லியில் படித்த கல்லூரிக்கு நேரில் சென்ற இலங்கை பிரதமர்!

அஸ்வின் மிகச் சிறந்த சிந்தனையாளர்: கில்கிறிஸ்ட்

குஜராத்: 16 அமைச்சர்கள் ராஜிநாமா!

மெஸ்ஸியின் இந்திய பயணம் ரத்து? ரசிகர்கள் ஏமாற்றம்!

SCROLL FOR NEXT