வேலை என்ற பெயரில் மோசடி 
இந்தியா

வெளிநாட்டு வேலை என்ற பெயரில் ரஷியா சென்ற இளைஞர்! உக்ரைனுக்கு எதிரான போரில்

வெளிநாட்டு வேலை என்ற பெயரில் ரஷியா சென்ற இளைஞர், உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்படுவதாகத் தகவல்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஹைதராபாத்: வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வழங்குவதாக, இடைத்தரகர்கள் ஏமாற்றி, ஹைதராபாத்தைச் சேர்ந்த 37 வயது நபரை ரஷியா அனுப்பி, அங்கு உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்த வைத்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது.

உக்ரைனுக்கு எதிரான போர்க் களத்தில் ஈடுபடுத்தப்பட்ட இளைஞரிடம் ஆயுதங்கள் வழங்கப்பட்டு இலக்குகளைக் குறி வைத்துத் தாக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முகமது அகமது என்ற இளைஞர், உக்ரைன் எல்லையில் போரில் ஈடுபடுத்த அனுப்பப்பட்டதாகவும், இந்திய அரசு தலையிட்டு, அவரை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உக்ரைன் எல்லைக்குள் இவர்களை அழைத்துச் சென்றபோது, முகமது, வாகனத்தில் இருந்து குதித்ததாகவும், போர் செய்ய முடியாது என்று அவர் மறுத்ததாகவும், வாகனத்திலிருந்து குதித்ததால், காலில் காயம் ஏற்பட்டிருக்கும் நிலையிலும், அவரை ராணுவ அதிகாரிகள் போரில் ஈடுபட வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

முதல் பத்து நாள்கள் தனக்கு நேர்ந்த துயரங்களை அவர் குடும்பத்தாருக்குத் தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாகவும், போர்க் களத்துக்கு அழைத்துச் சென்றபோதுதான், மனைவியை தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியதாகவும் கூறப்படுகிறது.

இவருடன் மொத்தம் 30 பேர் இவ்வாறு போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், இதில் ஆறு பேர் இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிட்வா புயலால் கனமழை - புகைப்படங்கள்

கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்: ‘பாஜகவின் அரசியல் விளையாட்டு’ -ஆளும் கம்யூ. விமர்சனம்

ரெட் அலர்ட்... சனம் ஷெட்டி!

கண் காணா அழகு... நபா நடேஷ்!

ஹலோ டிசம்பர்... அஞ்சு குரியன்!

SCROLL FOR NEXT