வெளிநாடுகளில் பணிபுரியும் அல்லது வசிக்கும் கேரள சமூகத்தினரின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் தனது அரசு உறுதியாக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்ட எக்ஸ் பதிவில்,
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பஹ்ரைனுக்கு வந்தநிலையில், அங்குள்ள வெளிநாட்டவர் சமூகத்தினரிடமிருந்து தனக்குக் கிடைத்த அப்பான, உற்சாகமான வரவேற்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
லோகா கேரள சபா மற்றும் மலையாள மிஷன் இணைந்து பஹ்ரைனில் ஏற்பாடு செய்த பிரவாசி மலையாளி சங்கமம் நிகழ்ச்சியையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் மற்றும் பத்மஸ்ரீ எம்.ஏ. யூசுப் அலி ஆகியோருடன் மேடையைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக இருந்தது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
யூசுப் அலி கேரளாவைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர், அவர் லுலு குரூப் இன்டர்நேஷனலின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
பினராயி விஜயன் வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணத்தில் உள்ளார். அக்டோபர் இறுதியில் இவர் கேரளத்திற்குத் திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிகார் அடுத்த முதல்வராக நிதீஷ் இருக்க மாட்டாரா? அமித் ஷா சூசகம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.